News Just In

11/09/2019 09:39:00 AM

சங்கரில்லா குழுமத்தின் வர்த்தக கட்டிடத்தொகுதி ஜனாதிபதியால் திறந்து வைப்பு

அபிவிருத்தியடைந்துவரும் கொழும்பு நகரில் பாரிய நவீன வர்த்தக கட்டிடத்தொகுதியான 'One Galle Face Tower' ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் வெள்ளிக்கிழமை (08.11.2019) திறந்து வைக்கப்பட்டது.

சங்கரில்லா குழுமத்திற்கு சொந்தமான இந்த நவீன வர்த்தக கட்டிடத்தொகுதி தங்குமிட வசதிகள், அலுவலகங்கள், உணவக வசதிகள், திரைப்படக் கூடங்கள் போன்ற பல்வேறு வசதிகளை ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளக்கூடிய அனுபவத்தை தரும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

07 மாடிகளைக்கொண்ட இந்த வர்த்தக கட்டிடத்தொகுதி 480,000 சதுர அடி பரப்பளவை கொண்டுள்ளதுடன், சுமார் 200 வர்த்தக நிலையங்களையும் கொண்டுள்ளது. நினைவுப்பலகையை திரைநீக்கம் செய்து கட்டிடத்தொகுதியை திறந்து வைத்த ஜனாதிபதி, அதனைப் பார்வையிட்டார்.

No comments: