News Just In

11/10/2019 08:24:00 PM

தேர்தலுக்கான தற்காலிக அடையாள அட்டைகளை விநியோகிக்கும் காலம் நீடிப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான தற்காலிக அடையாள அட்டைகளை விநியோகிக்கும் பணி எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இது வரையில் தேர்தல் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள தற்காலிக அடையாள அட்டைகள் நாளை தொடக்கம் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை அவசியமாகும். தேசிய அடையாள அட்டை இல்லாத வாக்காளர்களுக்கு தற்காலிக அடையாள அட்டைகளை வழங்க தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கிராம உத்தியோகத்தர் மூலம் தற்காலிக அடையாள அட்டைகளை வழங்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆட்பதிவுத் திணைக்களம் வாக்காளர்களுக்கு தற்காலிக அடையாள அட்டையை வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சுமார் 3 இலட்சம் பேருக்கு தற்காலிக அடையாள அட்டைகள் தேர்தல் ஆணைக்குழுவிடம் வழங்கப்பட்டிருப்பதாகவும் இவை உதவி மற்றும் தெரிவத்தாட்சி அதிகாரிகள் மூலம் வாக்காளர்களிடம் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நேற்று கையளிக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் தெரிவித்தார்.

வாக்களிப்பதற்கு ஆள் அடையாளத்தை நிருபிக்கக்கூடிய அடையாள அட்டை இல்லையாயின் கிராம உத்தியோகத்தரை சந்தித்து தேர்தல் ஆணைக்குழுவினால் வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடிறும் என்றும் அவர் மேலும் தெரிவிதார்.

No comments: