மட்டக்களப்பு கச்சேரியின் அரசாங்க அதிபரின் அறைக்குள் நுழைந்த கணநாதன் வினோஜித் எனும் நபர் செய்த அடாவடித் தனத்தால் இன்று காலை அங்கு பதட்ட நிலை உருவாகியது .
அராசங்க அதிபரின் அறைக்குள் நுழைந்த குறித்த நபர் அங்குள்ள மேசையின் மேல் ஏறி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால, பிரதமர் ரணில், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவரத்தன ஆகியோரின் உருவப் படங்களை கழட்டி பிரச்சினை செய்துள்ளார்.
பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு பொலிஸார் அவரை கைது செய்தனர்.

No comments: