News Just In

11/01/2019 11:45:00 AM

கொழும்பு-பதுளை புதிய ரயில் சேவை ஆரம்பம்

மலையக ரயில் சேவையில் நிலவும் பயணிகளின் கோரிக்கையை கவனத்தில் கொண்டு ரயில்வே திணைக்களம் இன்று முதல் கொழும்பிற்கும் பதுளைக்கும் இடையில் நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயில் ஒன்று சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றது.

தெனுவர மெனிகே என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த ரயில் காலை 7.00 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 3.27 க்கு பதுளையை சென்றடையும். காலை 7.20 மணிக்கு பதுளையில் இருந்து புறப்படும் இந்த ரயில் மாலை 3.04 மணிக்கு கொழும்பு கோட்டையை வந்தடையும்.

அதிநவீன வசதிகளைக் கொண்ட இந்த ரயிலில் முதலாவது வகுப்பில் குளிரூட்டப்பட்ட 2 பயணிகள் பெட்டிகளும், 2 ஆம் வகுப்பில் 2 பெட்டிகளும், 3 ஆம் வகுப்பில் 3 பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன. இதில் மொத்தமாக 250 பயணிகள் பயணிக்க முடியும் என்பதோடு, முதலாம் வகுப்பில் 88 பேரும், இரண்டாம் வகுப்பில் 96 பேரும், மூன்றாம் வகுப்பில் 66 பேரும் பயணிக்கமுடியும்.

இவற்றில் ஆசனங்களை முன்கூட்டியே பதிவு செய்துகொள்ள முடியும். கொழும்பு கோட்டை உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்கள் மற்றும் இருக்கை முன்பதிவு செயலிகளைப் பயன்படுத்தி கையடக்கத் தொலைபேசிகளிலும் ஆசனங்களை பயணிகள் முன்பதிவு செய்து கொள்ள முடியும்.

பதுளையிலிருந்து கொழும்பு வரையிலான குளிரூட்டப்பட்ட முதலாம் வகுப்பிற்கு 1,700 ரூபாவாகவும், இரண்டாம் வகுப்பிற்கு 1,000 ரூபாவாகவும் மூன்றாம் வகுப்பிற்கு 700 ரூபாவாகவும் ரயில் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: