News Just In

11/30/2019 02:03:00 PM

மட்டக்களப்பில் பெண்கள் அமைப்புக்களின் விழிப்புணர்வு நிகழ்வு


அனர்த்த முகாமைத்துவப் பெண்கள் கூட்டமைப்பு மற்றும் பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு இணைந்து நடாத்தும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் 16 நாள் செயல்வாத வார நிகழ்வுகள் மட்டக்களப்பில் நடாத்தப்பட்டு கொண்டிருக்கின்றன.

நவம்பர் 30 தெற்காசிய பெண்கள் தினமான இன்று மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் நோக்குடன் மட்டக்களப்பு பேருந்து நிலையத்தில் பெண்கள் அமைப்புகள் சேர்ந்த விழிப்புணர்வு நாடகம் நிகழ்த்தப்பட்டது

இயற்கை அனர்த்தங்கள் பெண்கள் வாழ்வாதாரத்தை எவ்வாறு பாதிக்கிறது, பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வழிகள், ஜாதி, மத, ஆண், பெண் பாகுபாடின்றி அனைவருக்கும் சமத்துவம் வேண்டும், வன்முறைகள் அற்ற வாழ்விற்காய் ஒன்றிணைவோம் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றது.












No comments: