News Just In

11/30/2019 04:20:00 PM

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் விஜயம் வரலாற்றுத் தொடர்புகளை வலுவூட்டியுள்ளது- இந்திய ஜனாதிபதி

இந்திய ராஷ்ட்ரபதி பவனில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கௌரவிக்கும் வகையில் நேற்று இரவு இந்திய ஜனாதிபதியினால் விருந்துபசாரம் வழங்கப்பட்டது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்து இரு நாடுகளுக்கிடையிலான வரலாற்றுத் தொடர்புகளை மேலும் வலுவூட்டியிருப்பதாக இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந் இதன் போது தெரிவித்துள்ளார்.

இது நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு தெற்காசிய வலயத்தின் எதிர்கால பயணத்தை வலுவூட்டும் என்றும் இந்திய ஜனாதிபதி கூறினார்.
கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையின் எதிர்காலத்திற்காக வகுத்துள்ள கொள்கைப் பிரகடனம் அந்நாட்டின் அனைத்து பிரிவுகளையும் துரிதமாக மேம்படும்முப் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதன்போது கருத்துத் தெரிவிக்கையில் இரு நாடுகளுக்கிடையிலான வரலாற்றுத் தொடர்புகளை மேலும வலுவூட்டுவதன் மூலம் வர்த்தகம் பொருளாதாரம் மற்றும் சமூக தொடர்புகளை மேம்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.

இரு நாட்டு மக்களினதும் வாழ்க்கையை மேம்படுத்துவது தொடர்பில் இரு நாட்டுத் தலைவர்களும் கவனம் செலுத்தியுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று பிற்பகல் இந்தியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி பாரதிய ஜனதாக்கட்சியின் செயலாளரைச் சந்திக்கவுள்ளார்.

No comments: