News Just In

11/01/2019 07:16:00 AM

அமைதியாக நடைபெற்ற தபால் மூல வாக்களிப்பு

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பானது வியாழக்கிழமை (31) முற்பகல் 08.30 மணிக்கு ஆரம்பித்து பிற்பகல் 04.15 மணிக்கு நிறைவடைந்துள்ளது. இன்றைய தினமும் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.

பொலிஸார், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகள் நவம்பர் மாதம் 04ஆம் மற்றும் 05ஆம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியும். குறித்த நாட்களில் வாக்களிக்க தவறும் வாக்காளர்கள் நவம்பர் 07ஆம் திகதி தபால் மூலம் வாக்குகளை அளிக்க முடியும்.

இந்த ஆண்டு தபால் மூல வாக்களிப்பிற்கு 659,514 பேர் தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்காக நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

No comments: