மத்திய மேற்கு அரபிக்கடலில் '"கியார்" புயல் நிலைகொண்டுள்ளது. இது தெற்கு, தென் மேற்கு நோக்கி நகர்கிறது. இதுபோல, மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை யொட்டிய லட்சத்தீவு பகுதியில் "மகா" புயல் நிலைகொண்டுள்ளது. அரபிக்கடலில் ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் உருவாகுவது 1961-ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே முதல்முறையாகும்.
இதற்கிடையில், வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நவம்பர் 04-ஆம் திகதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி, தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என்று வானிலை ஆய்வு குறிப்பிட்டுள்ளது.
"மகா" புயல் குமரிக்கடலில் நிலைகொண்டிருந்த வலுவான காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக மேலும் வலுவடைந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி, லட்சத்தீவு பகுதியில் நிலைகொண்டிருந்தது. இது கடந்த புதன்கிழமை நண்பகல் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், அன்று மாலையில் புயலாகவும் வலுவடைந்தது. இந்தப் புயலுக்கு "மகா" என்று பெயரிடப்பட்டது. இந்த பெயரை ஓமன் நாடு பரிந்துரை செய்திருந்தது. இந்தப் புயல், வியாழக்கிழமை மதியம் தீவிர புயலாக மாறியது. அடுத்த 24 மணி நேரத்தில் மிக தீவிர புயலாக மாறவுள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு நிலைய தென் மண்டல தலைவர் எஸ்.பாலசந்திரன் வியாழக்கிழமை தெரிவிக்கையில் அரபிக் கடலில் "மகா" புயல் வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் லட்சத் தீவு பகுதியில் நிலவியது. இது அமினி தீவுக்கு வடகிழக்கில் சுமார் 40 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருந்தது. இது தொடர்ந்து, வியாழக்கிழமை நண்பகல் தீவிரப் புயலாக வலுப்பெற்றது. மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய லட்சத்தீவு பகுதிகளில் தீவிர புயலாக நிலைகொண்டுள்ளது. இந்தப் புயல் வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் மிக தீவிர புயலாக மாறவுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் அடுத்த வரும் 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும், வடதமிழகத்தில் ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி ,சேலம், நாமக்கல், திருப்பூர் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மலைப்பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் பலத்தமழை பெய்யக்கூடும். சென்னை பகுதிகளில் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்தார்.
புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி: வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நவம்பர் 4-ஆம் திகதி ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் மத்தியக் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெற வாய்ப்பு உள்ளது. இதன்காரணமாக, தமிழகத்துக்கு மழை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

No comments: