News Just In

11/30/2019 08:57:00 AM

சூரியனை விட 70 மடங்கு பெரிய கருந்துளை கண்டுபிடிப்பு!

சூரியனை விட 70 மடங்கு பெரிய கருந்துளையை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

நட்சத்திரங்களின் ஆயுட்காலம் முடிவடையும்போது அவை ஆற்றல் மிகுந்த கருந்துளைகளாக மாறுகின்றன. விண்வெளியில் சூரியனை விட 20 மடங்கு பெரிய கருந்துளைகள் மட்டுமே இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் இதுவரை நம்பிக் கொண்டிருந்தனர்.

தற்போது 70 மடங்கு பெரிய கருந்துளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் கருந்துளை பற்றிய ஆய்வில் அடுத்த கட்டத்திற்கு விஞ்ஞானிகள் நகர்ந்துள்ளனர்.

பூமியில் இருந்து 15,000 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இந்த கருந்துளை இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

No comments: