News Just In

11/11/2019 08:01:00 AM

இருபதுக்கு 20 கிரிக்கட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி

பங்களாதேஷ், இந்திய அணிகளுக்கிடையிலான இருபதுக்கு 20 கிரிக்கட் கிண்ணத்தை தீர்மானிக்கும் தொடரின் இறுதிப் போட்டி நாக்பூரில் ஞாயிற்றுக்கிழமை (10.11.2019) இரவு ஆரம்பமானது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பை தேர்வுசெய்தது. இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 174 ஓட்டங்களைபெற்றது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாதிய பங்களாதேஷ் அணி 19.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 144 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 30 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.

இந்திய அணி சார்பில் பந்து வீச்சில் தீபக் சஹார் ஹெட்ரிக் அடங்கலாக மொத்தமாக 6 விக்கெட்டுக்களையும், சிவம் டூப் 3 விக்கெட்டுக்களையும், சஹால் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடரை 3:2 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, மூன்று இருபதுக்கு 20 போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியுடன் விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: