News Just In

11/01/2019 01:20:00 PM

தங்க நகைகளுடன் 14 இலங்கையர்கள் கைது!

31.97 மில்லியன் ரூபா பெறுமதியான 4.7 கிலாகிராம் தங்கத்தை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டுவந்த குற்றச்சாட்டில் 30 தொடக்கம் 50 வயதுடைய 14 பேரை கட்டுநயக்கா விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வியாழக்கிழமை (31) இரவு 7.30 மணியளவில் சென்னையிலிருந்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமான சேவையூடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தபோதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: