சீனா நாட்டில் போலியாக தயாரிக்கப்பட்ட 10 ஆயிரம் அப்பிள் ஐபோன்கள் மற்றும் ஐபேட்கள் அமெரிக்காவிற்கு கடத்தி வந்து ஒரு கும்பல் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்க வழக்கறிஞர் ராபர்ட் ப்ரூவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ள தயாரிப்பு மூலம் அமெரிக்காவிற்குள் வரும் போன்கள் உண்மையான அப்பிள் நிறுவன கடைகளில் சீரமைக்கப்பட்ட பின் அங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஐபோன்களுக்கும் தனித்துவமான IMEI எண்கள் இருக்கும். இது அமெரிக்கா மற்றும் கனடாவில் தரநிர்ணயம் செய்த பிறகே விற்பனைக்கு அனுப்பப்படும். அந்த ஒரிஜினல் எண்களை கண்டறிந்து அதனை மாற்றி இவர்கள் கள்ளச்சந்தை விற்பனையில் ஈடுபடுவது தெரிய வந்துள்ளதாகவும் இதைபோன்ற விற்பனையால் பல அப்பாவி வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.
இவ்வாறான போலி ஐபோன்கள் மற்றும் ஐபேட்களை FBI அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த மோசடி சம்பவம் தொடர்பாக 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 11பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

No comments: