ட்விட்டர் சமூகவலைத்தளத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜெக் டோனி இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் அடுத்த வருடம் இடம்பெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரங்கள் சூடுபிடித்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளிப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மையில் அரசியல் தொடர்பான விளம்பரங்களுக்கு ட்விட்டரின் சமூகவலைத்தள போட்டியாளரான பேஸ்புக் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டரின் இந்த தடை நவம்பர் 22 முதல் அமுலுக்கு வருகிறது. மேலும் இது குறித்த தகவல்கள் நவம்பர் 15-ஆம் தேதியன்று வெளியிடப்படுகிறது.

No comments: