News Just In

10/17/2019 01:19:00 PM

இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் மாகாண மட்ட விருது வழங்கும் நிகழ்வு

ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் அங்கம் வகிக்கும் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் 2019ஆம் ஆண்டுக்கான மாகாண மட்ட விருது வழங்கும் வைபவமானது இன்று வியாழக்கிழமை (17.10.2019) காலை 10 மணிக்கு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் பிரதிப் பொது முகாமையாளர் திருமதி. கல்ஹாரி டீ சில்வா தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் தவிசாளர் பீ.எம் தேவக வீரசிங்க அவர்களும், சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெயதீசன், திருகோணமலை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் நடராஜா பிரதீபன் அவர்களும், கௌரவ அதிதிகளாக Dr. ரஞ்சன் பண்டார, எச்.எம் களும் சத்துரங்க , திருமதி.நில்மினி ஹேரத் அவர்களும் கலந்து கொண்டனர்.

சிறப்பாக நடைபெற்ற மாகாண மட்ட விருது வழங்கும் வைபவத்தில் வட கிழக்கு மாகாணங்களின் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் இணைப்பாளர், மட்டக்களப்பு மாவட்ட சமூக பாதுகாப்பு சபையின் இணைப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், கணக்காளர்கள், உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி திணைக்கள முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

சிறந்த செயற்பாட்டின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டம் முதலாம் இடத்தினையும், அம்பாறை மாவட்டம் இரண்டாம் மற்றும் திருகோணமலை மாவட்டம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது. மேலும் செயலகங்கள் வாயிலாக சிறந்த கடமையாற்றிய உத்தியோகத்தர்களும் .இதன் பொது விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.







































No comments: