இன்றும் நாளையும் நடைபெறவுள்ள தபால் மூல வாக்களிப்பில் தமிழ் மக்கள் தமது வாக்குரிமையைத் தவறாது பிரயோகிக்க வேண்டும் எனவும், வாக்காளர்கள் தமக்கு விருப்பமான வேட்பாளருக்கு வாக்களிக்குமாறும், 5 தமிழ் கட்சிகளும் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு அண்மையிலுள்ள ப்ரைட் இன் விடுதியில் புதன்கிழமை (30) பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுடன் கூடிய ஐந்து கட்சிகளின் பிரதிநிதிகளுமே கூட்டாக இந்த முடிவை எடுத்துள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களதும் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளிவராத நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வேட்பாளர்களதும் தேர்தல் விஞ்ஞாபனங்கள் கிடைக்கப்பெற்றதும், விரைவில் மீண்டும் கூடி யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
10/31/2019 07:34:00 AM
Home
/
Presidential Election
/
உள்ளூர்
/
தமிழ் மக்கள் தமது வாக்குரிமையைத் தவறாது பிரயோகிக்க வேண்டும்
தமிழ் மக்கள் தமது வாக்குரிமையைத் தவறாது பிரயோகிக்க வேண்டும்
Subscribe to:
Post Comments (Atom)

No comments: