ஊவா வெல்லஸ்ஸ மற்றும் சப்ரகமுவ பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் அடுத்த வாரம் ஆரம்பமாகின்றன.
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் சகல பீடங்களின் கல்வி நடவடிக்கைகளும் எதிர்வரும் புதன்கிழமை(16.10.2019) ஆரம்பமாவதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர தெரிவித்தார்.
இதேவேளை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களினதும் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை(15.10.2019) மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாகவும் விடுதி வசதி உள்ள அனைத்து மாணவர்களும் திங்கட்கிழமை(14.10.2019) பல்கலைக்கழக விடுதிக்கு வருமாறு பல்கலைக்கழக பதிவாளர் வி.டி. கித்சிறி தெரிவித்துள்ளார்.
No comments: