இலங்கை சமாதான நீதிவான்கள் பேரைவையினால் கிழக்கு மாகாணம் சார்பாக சமூகத்திற்காக சிறந்த சேவையாற்றிய சமாதான நீதிவான்களின் சமூக சேவையை பாராட்டி கீர்த்திசிறி விருது வழங்கி கெளரவிக்கும் நிகழ்வு சனிக்கிழமை(12) மாலை அட்டாளைச்சேனையில் நடைபெற்றது.
இலங்கை தமிழரசுகட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணியின் தலைவராக பதவி வகிக்கும் லோகிதராஜா தீபாகரன் அவர்களுக்கு இலங்கை சமாதான நீதிவான்கள் பேரைவையின் தேசிய பணிப்பாளர் கலாநிதி பஹாத் மஜீட் அவர்கள் கீர்த்திசிறி விருது வழங்கி கௌரவித்தார்.
இந் நிகழ்வில் இலங்கை சமாதான நீதிவான்கள் பேரைவையின் வட மாகாண பணிப்பாளர், கிழக்கு மாகாண பணிப்பாளர், அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களின் பணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகஸ்தராக லோகிதராஜா தீபாகரன் அவர்கள் கடமையாற்றி வருகின்றார்.
"எமக்காக நாம் உதவிடுவோம் வாரீர்" அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், யோகாசன போதனாசிரியர், கோல்டன் ஈகிள் விளையாட்டு கழக செயலாளர், இருதயபுரம் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்க செயலாளர், யோகா ஆரோக்கிய இளைஞர் கழக செயலாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்க செயலாளர், குமாரத்தன் ஆலய நிருவாக உறுப்பினர், வட்டார தலைவர், "உதவும் கரங்கள்" அமைப்பின் நிருவாக உறுப்பினர், மட்டக்களப்பு மாவட்ட வளவாளர் குழாம் நிருவாக உறுப்பினர் ஆகிய பதவிகளையும் இவர் வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments: