யாழ்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியின் ஆரம்பபிரிவு பாடசாலைக்கான இரண்டு மாடி கட்டிடமொன்று அமைக்கப்படவுள்ளது. 12 மில்லியன் ரூபா செலவில் இந்த கட்டிடம் நிர்மாணிக்கப்படவுள்ளது.
தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் நிதிப்படுத்தலில் இதனை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் வெள்ளிக்கிழமை (11.10.2019) நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டினார்.
No comments: