News Just In

10/19/2019 04:40:00 PM

மட்டக்களப்பில் அனுட்டிக்கப்பட்ட ஈழ தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவு நாள்

ஈழ தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவு நாள் இன்று (19) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அனுட்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் சங்கத் தலைவர் V.கிருஷ்ணகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மட்டு - மாநகர முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொன்.செல்வராஜா, பா.அரியநேத்திரன் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமல்ராஜன் அவர்களின் 19 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டும், ஏனைய தமிழ், முஸ்லீம், சிங்கள ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு நீதி வேண்டியும் குறித்த நினைவு தினம் அனுட்டிக்கப்பட்டது.

No comments: