
மட்டக்களப்பு மாவட்டத்தில் அனர்த்தத்தின் போது பணியாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட கிராமிய அனர்த்த உதவிக் குழுக்கள் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றன.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் இவ்வாறு இயங்குகின்ற 480 தன்னார்வ தொண்டர்களுக்கான ஒன்றுகூடலும் பாராட்டு நிகழ்வும் இன்று சனிக்கிழமை (19) கல்லடி கடற்கரையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தி.சரவணபவன், மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் அ.சுதர்சன், அம்கோர் நிறுவனத்தின் ஸ்தாபகரும் பணிப்பாளருமான ப.முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்கள் கலந்து கொண்டு சிரமதானம், பனைமர விதைகள் நடுதல் மற்றும் திறன் விருத்திச் செயற்பாடுகளிலும் ஈடுபட்டனர். இதில் கிராம சேவக உத்தியோகத்தர்கள் மற்றும் அம்கோர் நிறுவன உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
No comments: