News Just In

10/19/2019 08:55:00 PM

தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியில் சிவாநந்தா மாணவர்கள் சாதனை

கண்டியில் வெள்ளிக்கிழமை (18) இடம்பெற்ற தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியின் மல்யுத்தப் (Wrestling) போட்டியில் சிவாநந்தா தேசிய பாடசாலை மாணவர்களான சீ.பவித்திரன் 57kg-61kg எடைப் பிரிவுக்கான போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தையும், எஸ்.தனுஜன் 45kg-48kg எடைப் பிரிவுக்கான போட்டியில்  மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுள்ளனர்.

வெற்றியீட்டிய மாணவர்களுக்கு சிவாநந்தா தேசிய பாடசாலை சமூகம் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு அவர்களுக்கு உறுதுணையாகவும் வழிகாட்டிகளாகவும் இருந்த பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர்களுக்கும், பயிற்றுவிப்பாளர் திருச்செல்வம் ஆசிரியர்  அவர்களுக்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.


No comments: