இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமான யாழ் சர்வதேச விமான நிலையம் (JIA) இன்று வியாழக்கிழமை (17.10.2019) காலை திறந்து வைக்கப்பட்டது.
யாழ் சர்வதேச விமான நிலையத்தின் பெயர்ப்பலகை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரால் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டு விமான நிலையத்தின் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்ச்சியில் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங், வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், உள்நாட்டு வௌிநாட்டு அதிதிகள் என முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
யாழ்பாணம் சர்வதேச விமான நிலையமானது யாழ் நகரிலிருந்து 20km தொலைவில் உள்ள பலாலி பிரதேசத்தில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: