ஆசிரியர் தினத்தினை முன்னிட்டு வருடா வருடம் வழங்கப்படும் குரு பிரதிபா பிரபா விருதினை கிழக்கு மாகாணத்தில் அதிக புள்ளிகளைப்பெற்ற மட்/ககு/வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் கடமையாற்றும் ஆசிரியர் குமாரசாமி தவராசா பெற்று பாடசாலைக்கும் கல்குடா கல்வி வலயத்திற்கும் பெருமை தேடித்தந்துள்ளார்.
இவ்விருதினை மாண்புமிகு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவர்கள் வழங்கி கெளரவித்தார் . இவர் கணித பாடத்தினை கற்பிக்கும் ஆசிரியராவதுடன், இப்பாடசாலையின் பழைய மாணவர் என்பதும், கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற போட்டிகளுக்காக மாணவர்களை பயிற்றுவித்து பல சாதனைகளை புரிந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது..

No comments: