News Just In

10/06/2019 08:40:00 AM

கோட்டபாயவிற்கு நிபந்தனைகள் இன்றி ஆதரவு - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்சவிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நிபந்தனைகள் எதுவுமின்றி ஆதரவளிக்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ச ஆகியோருடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

இரு தரப்பிற்கும் இடையில் கைச்சாத்திடப்படவுள்ள உடன்படிக்கை தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதன் பின்னர் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்சவின் இல்லத்தில் உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments: