News Just In

10/06/2019 08:13:00 AM

பாகிஸ்தானுக்கு எதிரான 20-20 போட்டியில் இலங்கை அணி வெற்றி

லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான 20-20 கிரிக்கட் போட்டியின் முதல் தொடரில் 64 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது. தனுஷ்க குணதிலக மற்றும் அவிஷ்க பெனாண்டோ ஆகியோர் சிறப்பான இணைப்பாட்டத்தை வழங்கினர்.

பந்து வீச்சில் தலா மூன்று விக்கெட்டுகளை பிரதீப் மற்றும் உதானா ஆகியோர் வீழ்த்தினர். ஹசரங்க சிறப்பாக பந்து வீசி 20 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு பங்களித்தார்.

166 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 17.4 ஓவர்களில் விக்கெட்டுக்கள் அனைத்தையும் இழந்து 101 ஓட்டங்களை பெற்று 64 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. இதன்படி மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி 1:0 என முன்னிலை பெற்றுள்ளது.

No comments: