News Just In

10/23/2019 12:55:00 PM

ஹேமசிறி பெர்னான்டோ, பூஜித் ஜயசுந்தர ஆகியோர் மீண்டும் விளக்கமறியலில்



உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோ, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பூஜித் ஜயசுந்தர ஆகிய இருவரும் எதிர்வரும் 6 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே இன்று (23) இதற்கான உத்தரவை பிறப்பித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் திருமதி.லங்கா ஜயரத்ன வழங்கிய உத்தரவை கொழும்பு உயர் நீதி மன்றம் இரத்து செய்தது.

இதனை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இந்த 2 பேரும் இன்று நீதி மன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

No comments: