News Just In

10/30/2019 08:46:00 AM

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து இராஜாங்க அமைச்சர் நீக்கம்

ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான வசந்த சேனாநாயக்க கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

"புதிய ஜனநாயக முன்னணி கூட்டணியின் கட்சித் தலைவர்கள் இந்த முடிவை எடுத்திருந்தனர்" என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் அகில விராஜ் காரயவசம் நேற்று (29) அறிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவுடைய புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவின் தேர்தல் பிரச்சாரத்திலிருந்து விலகுவதற்கான வசந்த சேனாநாயக்க அண்மையில் எடுத்த முடிவை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments: