இலக்கம் 76, விஜயராம மாவத்தை,கொழும்பு-07 இல் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான பெப்பர்மின்ற் உணவகம் (Peppermint Cafe) அங்கு பணி புரியும் ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் ஆங்கிலம் அல்லது சிங்களத்தில் பேசவேண்டும், தமிழில் பேசக் கூடாது என அறிவுறுத்தும் காட்சிப்பலகை வைத்திருப்பது தொடர்பில் செய்திகள் வெளியாகியிருந்தன. இது சமூகவலைத்தளங்களிலும் பேசுபொருளாக மாறியிருந்தது.
இந் நிலையில் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பில் தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அரசியலமைப்பின்படி, சம உரிமைகள் தொடர்பான 12ஆம் அத்தியாயம் , 03ஆம் சரத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை குறித்த தனியார் உணவகம் மீறியுள்ளதெனவும், இது அடிப்படை உரிமை மீறல் எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அரசகரும மொழிகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாகவும், குறித்த உணவகத்தினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.


No comments: