முல்லைத்தீவு கொக்குதொடுவாய் பாடசாலைக்கு முன்பாக சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் செல்வரத்தினம் கேதீஸ் (வயது11) சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதோடு மேலும் ஒரு மாணவன் படுகாயமடைந்துள்ளார்.
பாடசாலைக்கு முன்பாக சைக்கிளில் சென்ற மாணவர்களை கொக்குளாயிலிருந்து முல்லைத்தீவு நோக்கி வந்த வாகனம் மோதி தள்ளியதில் சம்பவ இடத்திலேயே ஒரு மாணவன் பலியாகியதுடன் மேலும் ஒரு மாணவன் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து சம்பவம் காரணமாக ஆத்திரமடைந்த மக்கள் பாடசாலை முன்பாக குவிந்துள்ளனர். கொக்குதொடுவாயில் தற்போது பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
No comments: