News Just In

10/08/2019 03:36:00 PM

சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி சங்கம் மற்றும் வேளாண் ஆராய்ச்சி உற்பத்தி உதவி அதிகாரிகள் சங்கம் ஆகியன இன்று முற்பகல் பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளன. இதன் காரணமாக பத்தரமுல்லை சந்தியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரும் அரசாங்க நியமனங்கள் வழங்கப்படுவதாகவும், சமுர்த்தி நிதி தவறாக பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தே அவர்கள் மேற்படி போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

No comments: