கடந்த ஞாயிற்றுக்கிழமை (06.10.2019) நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளுடன் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தையான அலியார் காசீம் முகமது இர்சாட் (வயது-34) உயிரிழந்தமை தொடர்பில் பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த நபர் தலைக்கவசம் அணியாமை மற்றும் உள்ளூர் வீதியில் இருந்து பிரதான வீதிக்கு செல்லும்போது பிரதான வீதியின் வாகனப் போக்குவரத்தினை அவதானிக்காமல் வீதியினை கடந்தமை விபத்துக்கு காரணமானதுடன்,
தனியார் பேருந்தின் சாரதி சமிந்த பிரியதர்சன குடிபோதையில் இருந்தமையும் அதிவேகமாக வண்டியினை செலுத்தியமையும் இவ் விபத்து சம்பவிக்க காரணமாகும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
No comments: