எதிர்வரும் நவம்பர் 16 திகதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவை ஆதரிக்கவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இன்று (13.10.2019) காலை 9.30 மணிக்கு கொட்டகலையில் அமைந்துள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் பின்னர் தேசிய சபையில் எடுக்கப்பட்ட முடிவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் அறிவித்தார்.
No comments: