News Just In

10/07/2019 04:35:00 PM

மட்டக்களப்பு மாவட்டத்தின் உன்னிச்சை கிராமத்தில் காட்டு யானைகளின் அட்டகாசத்தால் கிராம மக்களின் குடிமனைகள் சேதம்

(S.சதீஸ்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் உன்னிச்சை ராஜதுரை கிராமத்தில்  நேற்று ஞாயிற்றுக்கிழமை (06ஆம் திகதி) இரவு காட்டுயானைகள் உட்புகுந்து  குடிமக்கள் இருவரின் சொத்துக்களை  சேதப்படுத்திச் சென்றுள்ளது.

இப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள யானை தடுப்பு மின்சார வேலியினைத் தாண்டி  ஞாயிற்றுக்கிழமை இரவு  வந்த காட்டுயானைகள் உன்னிச்சை ராஜதுரை கிராமத்திலுள்ள சிறிய கடை ஒன்றினையும் வீடு ஒன்றினையும் தாக்கி சேதப்படுத்திச் சென்றுள்ளது.

காட்டுயானையினால் குறித்த வீட்டின் யன்னல் உடைக்கப்பட்டு வீட்டினுள் இருந்த நெல், கச்சான் போன்றவற்றை தின்று சேதப்படுத்திச் சென்றுள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.

இதேவேளை சிறிய முதலீட்டினைக் கொண்டு ஆரம்பித்த தமது சிறிய கடை யானையின் தாக்குதலில் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இச் சேதம் தொடர்பாக வீட்டு உரிமையாளரும் கடை உரிமையாளரும் கிராம சேவையாளரிடம், பொலிஸாரிடமும் அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இச் சேதங்களை  ஆயித்தியமலை பொலிஸ்  பார்வையிட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.

ந்த சேதத்திற்கு தக்கு உரிய அரச அதிகாரிகள் நஸ்டஈட்டை பெற்றுத்தருமாறும் இவர்கள் கோரியுள்ளனர்.











No comments: