News Just In

10/12/2019 12:49:00 PM

வவுணதீவு பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி

(S.சதீஸ்)
மட்டக்களப்பு மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வு வௌ்ளிக்கிழமை (11.10.2019) பிற்பகல் நாவற்காடு பாரத் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி செயலகத்தின் நிகழ்ச்சித் திட்டத்திற்கமைவாக நடைபெற்ற இப் போட்டியில் சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் என நான்கு அணிகள் பங்குகொண்டன.

இப் போட்டியில் ஆண், பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டம், கயிறு இழுத்தல், கால்பந்தாட்டம், எல்லே, கிரிக்கட், கூடைப்பந்து உள்ளிட்ட பல விளையாட்டுக்கள் நடைபெற்றன.

எல்லே விளையாட்டுப் போட்டியில் மஞ்சள் அணியினர் 1ம் இடத்தினையும், நீல ஆணியினர் 2ம் இடத்தினையும், பச்சை ஆணியினர் 3ம் இடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.

வலைப்பந்து போட்டியில் நீல அணியினர் 1ம் இடத்தினையும், சிவப்பு ஆணியினர் 2ம் இடத்தினையும், பச்சை ஆணியினர் 3ம் இடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.

இதேபோன்று, கிரிக்கெட் போட்டியில் போட்டியில் மஞ்சள் அணியினர் 1ம் இடத்தினையும், பச்சை அணியினர் 2ம் இடத்தினையும், நீலம் ஆணியினர் 3ம் இடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.

இதேவேளை இன்றைய இறுதிநாள் நிகழ்வில் கரவெட்டி ஆதவன் கழகத்தினரும், காஞ்சிரங்குடா ஜெகன் கழகட்த்திருக்குமிடையே சினேகபூர்வமான கால்பந்தாட்டப் போட்டி இடம்பெற்றது. இதில் 2க்கு 1 என்ற விகிதத்தில் கரவெட்டி ஆதவன் விளையாட்டுக்கழகம் வெற்றியை தன்வசமாக்கிக் கொண்டது.

இவ் நான்கு அணிகளுக்குமிடையிலான இடம்பெற்ற போட்டியில் கூடிய புள்ளிகளைப் பெற்று மஞ்சள் அணி முதலாம் இடத்தினையும், 2ஆம் இடத்தினை நீலம் அணியும், 3ஆம் இடத்தின பச்சை அணியும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

வெற்றி பெற்ற அணிகளுக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், கணக்காளர் வீ.வேல்ராஜசேகரம், உதவித் திட்டப் பணிப்பாளர் ரி.நிர்மலராஜ், நிருவாக உத்தியோகத்தர் கே.கோமளேஸ்வரன் போன்றோர் வெற்றிக் கிண்ணங்களையும் பரிசுகளையும் வழங்கிவைத்தனர்.







No comments: