சர்வதேச முதியோர் தினத்தினை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் வியாழக்கிழமை (10.10.2019) முதியோர் தின நிகழ்வுகள் நடைபெற்றன.
திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.அருந்தவராசா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் - காணி எம்.ஏ.அனஸ், உதவி மாவட்டச் செயலாளர் என்.பிரதீபன், பிரதம கணக்காளர் கே.பரமேஸ்வரன் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பிரதேச முதியோர் சங்கங்களின் பாடல், நடனம், கோலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்வுகள் அரங்கேறியதுடன் சுய தொழில் முயற்சியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வுகளும் நடைபெற்றன.
சுய தொழில் முயற்சி வெற்றியாளர்கள்
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட முதியோர் சங்கத்தைச் சேர்ந்த மகாலிங்கம் - மாகாண மட்டத்தில் 1ஆம் இடம், தேசிய மட்டத்தில் 2வது இடம்
கிண்ணியா முதியோர் பகல் பராமரிப்பு நிலையம் - மாகாண மட்டத்தில் 1ஆம் இடம், தேசிய மட்டத்தில் 3ம் இடம்
கந்தளாய் முதியோர் சங்கம் - மாகாண மட்டத்தில் 2ஆம் இடம் தேசிய மட்டத்தில் 4ஆம் இடம்
சென் யோசப் முதியோர் இல்லம் - மாகாண மட்டத்தில் 2ஆம் இடம்

இந் நிகழ்வுகள் மாவட்ட முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உதவியாளர் ஏ.எல்.இர்பான் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றுள்ளது.

No comments: