கடந்த சில பல நாட்களாக பெய்துவரும் மழை காரணமாக சில பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
புத்தளம் மாவட்டத்தில் ரத்மல்யாய, தில்லியடி உள்ளிட்ட பல பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன் ,புத்தளம் மாவட்டத்தின் பல குளங்களில் நீர் மட்டம் வழிந்தொடும் நிலையை எட்டியுள்ளது. கடுங்காற்றுடன்கூடிய மழை காரணமாக காலிப் பகுதியில் கடல் கொந்தளிப்புக் காணப்படுகின்றது.
அதனால் மீன்பிடி நடவடிக்கைகளின்போது மிகவும் அவதானமாக செயற்படுமாறு மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
காலி, ரத்கம உள்ளிட்ட பிரதேசங்களில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு தடங்கல் ஏற்பட்டுள்ளன.
திருகோணமலை மாவட்டத்தில் பல பிரதேசங்களில் கடும் மழை பெய்து வருகிறது கிண்ணியா பகுதியில் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
காலி, மாத்தறை பிரதேச பாதையில் சமுத்திர மாவத்தைப் பகுதியில் கடல் மண் குவிந்திருப்பதால் போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டுள்ளது. மழை மற்றும் மண்சரிவு காரணமாக மூடப்பட்டிருந்த எல்ல, வெல்லவாய பாதை தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளது.
No comments: