News Just In

10/29/2019 11:00:00 AM

சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் வீழ்ந்தது முதல் நடந்த சம்பவங்கள் !

திருச்சி மாவட்டம் மணப்பாறைக்கருகில் உள்ள நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பிரிட்டோ ஆரோக்கியராஜ்-கலாராணி. ஆகியோரின் இரண்டு வயது மகன் சுஜித் வில்சன் வெள்ளிக்கிழமையன்று வயல்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது பிற்பகல் 05.30 மணியளவில் எதிர்பாராத விதமாக ஆழ்துளைக் குழாய்க்குள் விழுந்தான்.
Saturday, 26 October 2019
6:49 AM
ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித்தை மீட்கதேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைவு!
7:35 AM
குழந்தை சுஜித்தின் நிலை அறிந்து தாய் கலாமேரி மயக்கம்!
7:57 AM
குழந்தை சுஜித்தை உயிருடன் மீட்க 14 மணி நேரத்திற்கும் மேலாக தீவிரமாக போராடும் மீட்புக்குழு! 
11:15 AM
குழந்தை சுஜித்தை மீட்க சம்பவ இடத்திற்கு வந்தது மாநில பேரிடர் மீட்புப் படை!
 12:05 PM
உயிருக்கு போராடும் குழந்தை சுஜித்தை மீட்க மதுரை மணிகண்டன் குழுவினர் மீண்டும் முயற்சி!
12:46 PM
குழந்தை சுஜித்தை ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்க 33 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படை சம்பவ இடத்திற்கு வந்தது!
1:55 PM
சிறுவன் சுஜித்தை ஒன்றறை மணி நேரத்தில் மீட்க முடியும் என தேசிய மீட்பு படையினர் நம்பிக்கை!
3:11 PM
அரைமணி நேரத்தில் குழந்தை மீட்கப்படும் என தேசிய பேரிடர் படை நம்பிக்கை!
 4:05 PM
70 அடி ஆழத்தில் உள்ள குழந்தை சுஜித்தை தூக்கும்போது நவீன கருவியில் இருந்து குழந்தை நழுவியது!
5:21 PM
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித், 75 ஆழத்திற்கு சென்றுவிட்டது!" - அமைச்சர் விஜயபாஸ்கர்
5:22 PM
குழந்தை விழுந்த ஆழ்துளை கிணற்றுக்கு அருகே மற்றொரு குழி தோண்ட முடிவு! 

Sunday, 27 October 2019
8:05 AM
ஆழ்துளை கிணற்றில் சிக்கித் தவிக்கும் குழந்தையை மீட்க உச்சக்கட்ட போராட்டம்!
 8:05 AM
ரிக் இயந்திரத்தின் மூலம் ஆழ்துளை அருகே குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது!
 8:06 AM
குழிக்குள் இறங்கி குழந்தையை மீட்க தயார் நிலையில் வீர்ர்கள்!
 10:13 AM
மீட்பு பணிக்காக மேலும் ஒரு ரிக் இயந்திரத்தை பயன்படுத்த முடிவு!
 11:01 AM
குழந்தை சுஜித்துக்காக தொடரும் பிரார்த்தனைகள்!
 11:45 AM
"குழந்தை சுஜித் மயக்க நிலையில் இருக்கலாம்!" - திருச்சி மாவட்ட ஆட்சியர்
 1:46 PM
"கேமரா மூலம் குழந்தையின் நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது!”- ராதாகிருஷ்ணன்
 3:00 PM
குழந்தை சுஜித்தை மீட்கரிக் இயந்திரம் மூலம் இதுவரை 34 அடிக்கு குழி தோண்டப்பட்டுள்ளது!
4:38 PM
சுஜித்தை மீட்கும் நிகழ்விடத்திற்கு 2வது ரிக் இயந்திரம் வந்தடைந்தது!
 7:36 PM
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 50 மணி நேரத்தை கடந்தது!

Monday, 28 October 2019 
5:32 AM
ரிக் இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது சரிபார்க்கப்பட்டு மீண்டும் பணி தொடங்கியது!
 7:51 AM
மீட்புப்பணி நடைபெற்றுவரும் நடுக்காட்டுப்பட்டியில் தடையற்ர மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது!
8:03 AM
மணி நேரத்தில் 10 அடி மட்டுமே தோண்டிய ரிக் இயந்திரம்...!
 10:21 AM
இயந்திரம் மூலம் நடைபெறும் மீட்பு பணி திருப்தியளிக்கவில்லை!" - ராதாகிருஷ்ணன்
 10:42 AM
ரிக் இயந்திரத்தில் நவீன ட்ரில் பிட்டை பொறுத்தி பாறையை குடையும் பணி தொடங்கியது!
 11:28 AM
மழை பெய்து வரும் நிலையிலும் குழந்தை சுஜித்தை மீட்கும் பணி அயராது நடைபெற்று வருகிறது!
11:34 AM
குழந்தை சுஜித்தை மீட்கும் பணி 65 மணிநேத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது...!
 11:52 AM
இயந்திர கோளாறு காரணமாக மீட்பு பணி தற்காலிகமாக நிறுத்தம்!
 12:04 PM
நவீன ரிக் இயந்திரத்தில் தற்போது 3வது முறையாக மீண்டும் பழுது!
 12:11 PM
குழந்தை உள்ள ஆழ்துளை கிணறு அருகே இதுவரை 45 அடிக்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது!
 12:38 PM
போர்வெல் இயந்திரம் மூலம் சிறிய துளைகள் போட்டு பாறைகள் உடைக்க திட்டம்!
 12:50 PM
மணப்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
 12:59 PM
போர்வெல் இயந்திரம் மூலம் பாறையை துளையிடும் பணி தொடங்கியது...!
2:35 PM
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 69 மணி நேரத்தை கடந்து நடைபெற்றுவருகிறது!
3:20 PM
போர்வெல் இயந்திரம் மூலம் பாறையில் 15 அடி ஆழத்திற்கு துளையிடப்பட்டுள்ளது!
 3:32 PM
பள்ளம் தோண்டும் பகுதியில் 60 அடிக்கு கீழ் பாறை முடிந்து மண் இருப்பதாக தகவல்...!
 4:09 PM
ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை சுஜித் மீது மண் சரிவு!
 4:35 PM
மீண்டும் ரிக் இயந்திரத்தை பயன்படுத்தி துளையிடும் பணி தொடங்கியுள்ளது...!
 5:16 PM
ரிக் இயந்திரம் மூலம் துளையிடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது....!
 5:28 PM
குழந்தையை மீட்கும் பணி 72 மணி நேரத்தை தாண்டி வது நாளாக தொடருகிறது...!
 5:36 PM
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 72 மணி நேரத்தை தாண்டி வது நாளாக தொடருகிறது...!
5:37 PM
மீட்பு பணி நடைபெற்று வரும் நடுகாட்டுப்பட்டியில் மழை பெய்து வருவதால் மீட்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்...!
8:15 PM
98 அடி குழி தோண்ட இன்னும் 12 மணி நேரம் ஆகும் - பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி

Tuesday, 29 October 2019
12:25 AM
சுஜித் மீட்பு பணி: போர்வெல் மூலம் துளையிடும் பணிகள் முடிவடைந்த நிலையில்மீண்டும் ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டும் பணி தொடங்கியது!
2:47 AM
ஆழ்துளை கிணற்றில் விழுந்த வயது குழந்தை சுஜித் வில்சன் உயிரிழந்துவிட்டதாக ராதாகிருஷ்ணன் தகவல்!
2:48 AM
சுஜித்தின் உடல் சிதைந்துஆழ்துளை கிணற்றிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக தகவல்!
 4:40 AM
ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை சுஜித்தின் உடல் நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு!
 4:41 AM
மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு குழந்தை சுஜித்தின் உடலை கொண்டு சென்றனர் பேரிடர் மீட்பு படையினர்!
5:51 AM
மணப்பாறை அரசு மருத்துவமனையில் குழந்தை சுஜித்தின் உடற்கூறாய்வு தொடங்கியது!
 6:31 AM
சுஜித்தின் உடல் பாத்திமா புதூரில் உள்ள கல்லறை தோட்டத்திற்கு எடுத்துச்செல்லப்படுகிறது!
 6:51 AM
புதூரில் உள்ள கல்லறை தோட்டத்திற்கு கொண்டுவரப்பட்டது சுஜித்தின் உடல்!
 7:05 AM
சுஜித்தின் உடலிற்கு அஞ்சலி செலுத்த புதூரில் உள்ள கல்லறை தோட்டத்திற்கு குவிந்த மக்கள்!
7:10 AM
புதூரில் உள்ள கல்லறை தோட்டத்தில் சுஜித்திற்கு இறுதி சடங்கு நடக்கிறது!
 7:55 AM
குழந்தை சுஜித் தவறி விழுந்து உயிரிழந்த 600 அடி ஆழ்துளை கிணறு மூடப்படுகிறது!
 8:14 AM
ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சுஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது!

No comments: