உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் காரணமாக கொலைக் குற்றம் புரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோரின் பிணை கொழும்பு மேல் நீதிமன்றினால் இன்று (09.10.2019) இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக பிணை வழங்குவது சட்டத்திற்கு முரணான விடயம் எனத் தெரிவித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குறித்த இருவரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
No comments: