News Just In

10/09/2019 05:18:00 PM

புனித மிக்கேல் கல்லூரி மாணவன் 193 புள்ளிகள் பெற்று புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை

அண்மையில் வெளியான தரம்-05 புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவன் வரதராஜன் வற்சன் போல் 193 புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவ்வருடம் புனித மிக்கேல் கல்லூரியில் இருந்து 163  மாணவர்கள் தரம்-05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு  தோற்றியிருந்தனர். இவர்களில் 53 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: