அம்பாறை சாய்ந்தமருதில் 1.5 கோடி ரூபாய் பெறுமதியான கஜமுத்துக்களுடன் அக்கரைப்பற்று பகுதியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை (08.10.2019) இரவு 8 மணியளவில் அக்கரைப்பற்று பகுதியை சேர்ந்த அலிப்தம்பி முஹமட் ஹஸ்னி(வயது-30), மீரா முகைதீன், முகமட் சலீம்(வயது-39) ஆகியோர் 3 முத்துக்களுடன் கைதாகியுள்ளனர்.
சாய்ந்தமருது பள்ளிவாசலின் முன்னால் சந்தேகத்திற்கிடமாக காணப்பட்ட குறித்த நபர்களை பொலிசார் மாறுவேடத்தில் சென்று பிடித்துள்ளனர். கைதானவர்கள் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
No comments: