News Just In

10/18/2019 12:50:00 PM

Big Bad Wolf சர்வதேச புத்தக கண்காட்சி இன்று ஆரம்பம்

Big Bad Wolf சர்வதேச புத்தகக் கண்காட்சியானது இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை (18) ஆரம்பமாகிறது. இந்த புத்தகக் கண்காட்சி ஒக்டோபர் 28ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. 

இங்கு 50% தொடக்கம் 80% விலைக் கழிவுடன் புத்தகங்களை பெற்றுக் கொள்ளமுடியும். இந்த சர்வதேச புத்தகக் கண்காட்சியானது திங்கள் முதல் வியாழன் வரை காலை 10 மணியிலிருந்து இரவு 10 மணி வரையும், வெள்ளி முதல் ஞாயிறு வரையான காலப்பகுதியில் 24 மணிநேரமும் திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: