வீதியோரங்களில் அதிக நேரம் வாகனங்களை நிறுத்துவதாயின் அது தொடர்பில் 119 என்ற தொலைபேசி எண்ணுக்கு தெரியப்படுத்துமாறு பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
வீதியோரங்களில் அதிக மணித்தியாலங்களுக்கு வாகனங்களை நிறுத்திச் செல்லும் சாரதிகள் 119 என்ற தொலைபேசி எண்ணுக்கு அழைப்பினை மேற்கொண்டு அறிவிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர அறிவித்துள்ளார்.
119ற்கு தெரியப்படுத்தும்போது வாகனம் நிறுத்தப்படும் இடத்தின் விபரத்தைத் தெரியப்படுத்துமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நிறுத்தப்படும் வாகனத்தின் சாரதிகள் அந்த வாகனத்தில், தொடர்பு கொள்வதற்கான தகவல்களைக் காட்சிப்படுத்துமாறும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர கோரியுள்ளார்.
அண்மையில் மட்டக்குளிய பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் வெடிகுண்டு இருப்பதாக பரவிய வதந்தியையடுத்தே பொலிஸ் ஊடகப் பேச்சாளரால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
No comments: