News Just In

10/18/2019 12:00:00 PM

தமிழ் தேசிய கட்­சி­களின் 13 அம்ச கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது - பௌத்த மதகுரு­மார்கள் எதிர்ப்பு

தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் ஐந்து தமிழ் தேசிய கட்­சிகள் முன்­வைத்­துள்­ள 13 கோரிக்­கை­களுக்கு பௌத்த மத­குரு­மார்கள் கடும் எதிர்ப்­பினை வெளி­யிட்­டுள்­ளனர். ஒற்­றை­யாட்சி நீக்­கப்­பட வேண்டும், சுயநிர்­ணய எல்­லை ­என்ற கோரிக்கையை துளி­ய­ளவும் ஏற்க முடி­யாது என்று கடுமை­யாக சாடி­யுள்­ளனர்.

ஓமல்பே சோபித தேரரின் கருத்து
இந்த 13 கோரிக்­கை­களை எந்த கட்சி ஏற்றுக் கொள்­கின்­றது என்­பதை நாமும் ஆர்­வத்­துடன் எதிர்­பார்த்­தி­ருக்­கின்றோம். எந்­த­வொரு வேட்­பா­ள­ருக்கும் இவற்றை கையி­லெ­டுத்து வாசிப்­ப­தற்கு கூட உரிமையில்லை. 

எல்லே குண­வங்ச தேரரின் கருத்து
இவர்கள் முழு இலங்­கை­யையும் சுய­நிர்­ணய எல்­லை­யாகக் கோரி­னாலும் அதை நாம் ஏற்றுக் கொள்வோம். ஆனால் வடக்கை மாத்­திரம் கோரு­வதை ஏற்க முடி­யாது.

மாகல்­கந்தே தேரரின் கருத்து
தமிழ் அர­சி­யல்­வா­தி­களின் அடிப்­ப­டை­வாத கோரிக்­கை­களை ஏற்றுக் கொள்ள முடி­யாது. கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிப­தி­யாகத் தெரிவு செய்யப்­பட்டால் விடுதலைப்புலிகளின் கொள்கைகளை மீண்டும் கொண்டு வர முயற்சிக்கும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு புனர்வாழ்வளிக்குமாறு கோருகின்றேன்.

அஸ்கிரிய பீடத்தின் உப தேரர் வெனருவே உபாலி தேரரின் கருத்து
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யோசனைகள் மீண்டும் பிரிவினைவாதத்தை தோற்றுவிக்க மேற்கொள்ளப்படும் தூண்டுதலா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள எந்த யோசனைகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

No comments: