News Just In

10/18/2019 11:17:00 AM

உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் வீழ்ச்சியடைந்த சுற்றுலாத்துறையில் முன்னேற்றம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் வீழ்ச்சி அடைந்திருந்த சுற்றுலாத்துறை தற்பொழுது படிப்படியாக வழமை நிலைக்கு திரும்பி வருகின்றது. 

கடந்த 8 மாத காலப்பகுதியில் சுற்றுலாத்துறையின் மூலம் 238 கோடி அமெரிக்க டொலர் வருமானமாக பெறப்பட்டிருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 

2019 ஆகஸ்ட் மாதத்தில் 143,587 சுற்றலாப்பயணிகள் வருகை தந்துள்ளனர். இத் தொகை கடந்த ஜுலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 24.1 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 27 கோடி அமெரிக்க டொலர்கள் பெறப்பட்டுள்ளது. 

No comments: