லண்டனின் லுட்டான் விமான நிலையத்தில் வைத்து நான்கு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தடைசெய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
35 வயதுடைய பெண் ஒருவரும் 35,39 மற்றும் 41 வயதுகளுடைய ஆண்கள் மூவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நான்கு பேரும் 'ERSOU' இன் பயங்கரவாத தடுப்பு காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதுடன், குறித்த ஆண்கள் மூவரும் லண்டனில் உள்ள சிறைச்சாலையொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் கைதான மேற்படி பெண் நவம்பர் மாதம் பிணையில் செல்வதற்கு அனுமதி எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments: