News Just In

10/08/2019 10:06:00 AM

இருபதுக்கு 20 தொடரை கைப்பற்றியது இலங்கை


இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி திங்கட்கிழமை (07.10.2019) லாஹூர் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றது.

இப்போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்று துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ஒட்டங்களைப் பெற்றது. 

இலங்கை அணி சார்பில் 
பானுக ராஜபக்ஷ அதிகபட்சமாக 77 ஓட்டங்களையும், செஹான் ஜயசூரிய 34 ஓட்டங்களையும், அணித்தலைவர் தசுன் சானக ஆட்டமிழக்காமல் 27 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

183 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 147 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.  இமத் வசீம் 47 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார். 

பந்துவீச்சில் நுவன் பிரதீப் 4 விக்கட்டுக்களையும், வனிந்து ஹசரங்க 3 மூன்று விக்கெட்டுக்களையும், இசுரு உதான 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். 

இலங்கை அணி 36 ஒட்டங்களால் இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியையும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. 

முன்னதாக இடம்பெற்ற முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி எதிர்வரும் 9 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

No comments: