News Just In

10/09/2019 09:28:00 AM

30 நாட்களாக தொடரும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்துவரும் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கைகள் இன்று 30ஆவது நாளாகவும் இடம்பெறுகின்றன.
ஜனாதிபதித் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுகின்றமையானது தேர்தல் நடவடிக்கைககளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என உயர்கல்வி அமைச்சின் செயலாளர் மாயாதுன்னே தெரிவித்துள்ளார்.

தமது கோரிக்கை தொடர்பில் இதுவரை எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை எனவும் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானத்திற்கு அமைய மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்துவரும் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் தேர்தல் சட்டத்திற்கு அமைய உரிய நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உள்ளதெனவும் இது தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முறையிட்டுள்ளதாகவும் உயர்கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

No comments: