News Just In

10/09/2019 09:02:00 AM

25 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனையான ஓவியம்

புகழ்பெற்ற ஜப்பானிய கலைஞரான யோஷிடோமோ நாராவின் (Yoshitomo Nara) பெரிய அளவிலான ஓவியம் அண்மையில் ஹாங்காங்கில் நடந்த ஓவிய ஏலத்தில் 25 மில்லியன் அமெரிக்க டாலரிற்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. 

ஏறக்குறைய ஏழு அடி நீள அகலம் கொண்ட இந்த ஓவியம் கோபமான கண்களைக் கொண்ட பெண் ஒருவரை பிரதிபலிக்கின்றது. பன்னிரண்டு ஆண்டுகள் ஜேர்மனியில்  இருந்து ஜப்பானுக்குத் திரும்பிய பின்னர் யோஷிடோமோ நாரா இந்த ஓவியத்தை வரைந்துள்ளார். இந்த ஓவியம் யோஷிடோமோ நாராவின் மிகப்பெரிய படைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. 

இந்த ஆண்டு மே மாதம் நாராவின் ஓவியமொன்று 4.45 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனையானது. இது அவரது சமீபத்திய விற்பனையின் மொத்த தொகையில் ஐந்தில் ஒரு பங்கு.

No comments: