கணவன் இறந்த விரக்தியில் பெண்ணொருவர் தன்னுடைய இரண்டு பிள்ளைகளையும் கிணற்றில் போட்டு தானும் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் வவுனியாவில் இன்று இடம்பெற்றுள்ளது.
அண்மையில் இடம்பெற்ற விபத்தில் மரணித்த பட்டிக்குடியிருப்பைச் சேர்ந்த உதயன் என்பவருடைய மனைவி தன்னுடைய பெண் பிள்ளை (நான்கு வயது) மற்றும் ஆண் பிள்ளையையும் (இரண்டரை வயது) கிணற்றுக்குள் போட்டுவிட்டு தானும் கிணற்றுள் குதிக்க முயன்ற நிலையில் அயலவர்களால் தடுக்கப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திலேயே ஆண் பிள்ளை மரணித்த நிலையில், பெண் பிள்ளை உயிருடன் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளது.


No comments: