சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊழல் தடுப்புச் சட்டத்தை மீறியது உட்பட மூன்று குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டதை அடுத்து பங்களாதேஷ் அணியின் சகலதுறை வீரர் ஷாகிப் அல் ஹசன் இரண்டு ஆண்டுகளுக்கு அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஷாகிப் அல் ஹசன் "நான் விரும்பும் விளையாட்டிலிருந்து தடைசெய்யப்பட்டதற்கு எனக்கு மிகவும் வருத்தமளிக்கின்றது.உலகெங்கிலும் உள்ள பெரும்பான்மையான வீரர்கள் மற்றும் ரசிகர்களைப் போலவே, கிரிக்கெட்டும் ஊழல் இல்லாத விளையாட்டாக இருக்க விரும்புகிறேன், குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்கின்றேன். மீண்டும் இதே தவறை செய்யமாட்டேன்" என்றார்.
“ஷாகிப் அல் ஹசன் மிகவும் அனுபவம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் வீரர். தனது பிழைகளை ஏற்றுக்கொண்டு விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்துள்ளார். எதிர்காலத்தில், இளைய வீரர்கள் தனது தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளவும் உதவ முன்வந்தாரென ஐ.சி.சி நிர்வாகி அலெக்ஸ் மார்ஷல் தெரிவித்தார்.

No comments: